×

போலீசில் ஒப்படைப்பு டாஸ்மாக் கடையை அகற்றகோரி ஜனநாயக மாதர் சங்கம் மனு

தஞ்சை, டிச.24: தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில், பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலால் பிரிவு அதிகாரி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. மாதர் சங்க மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவர் கலைச்செல்வி, மாவட்ட பொருளாளர் வசந்தி, மாவட்டக்குழு உறுப்பினர் வனரோஜா, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார், சிபிஎம் மாநகரக் குழு உறுப்பினர் ராஜன், வாலிபர் சங்க மாநகர செயலாளர் காதர்உசேன், மாநகரத் தலைவர் ஹரிபிரசாத் உள்ளிட்ட அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Mather ,store ,Association ,Tasmac ,
× RELATED அமாவாசையை முன்னிட்டு டாஸ்மாக்...